சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்

  • IndiaGlitz, [Friday,November 04 2016]

பிரபல இயக்குனர் கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து முடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடந்த நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டது.
இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் 'யூ/ஏ' சர்டிபிகேட் அளித்துள்ளனர். இதனால் இந்த படம் தமிழக அரசின் வரிவிலக்கு சலுகையை இழக்கின்றது.
இந்நிலையில் இந்த படம் சென்சார் ஆகிவிட்டதால் வரும் 11ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. தெலுங்கில் சிம்பு வேடத்தில் நாகசைதன்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பு, மஞ்சிமா மோகன், டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.