கமல் கைவிட்டாலும் தன்னம்பிக்கையை கைவிடாத சிம்பு.. 'STR48' படத்தின் சூப்பர் தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த ’STR48’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேல் நடந்த நிலையில் தற்போது திடீரென கமல்ஹாசன் இந்த படத்தின் தயாரிப்பு பணியில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து ’STR48’ படத்தை தயாரிப்பது குறித்து சில தயாரிப்பாளர்கள் இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தற்போது சிம்புவே தனது ஆத்மன் புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பாக இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.200 கோடி என்று கூறப்படும் நிலையில் சிம்பு இந்த படத்தின் கதை மீது உள்ள நம்பிக்கையின் காரணமாகவும் தனது நடிப்பில் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாகவும் அவரே இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் அவருடன் சில தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் என்றும் கூறப்படுகின்றன.
இந்த நிலையில் புதிய தயாரிப்பு நிறுவனங்களுடன் கூடிய ’STR48’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் படப்பிடிப்பும் மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிம்புவின் திரை உலக வாழ்வில் இந்த படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தின் அறிவிப்பை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments