'எஸ்டிஆர் 48' படத்தின் ரகசிய படப்பிடிப்பு நடந்ததா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் 48வது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார் என்பதும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
மேலும் இந்த படத்திற்காக சிம்பு தற்காப்பு கலையை பயின்று வந்திருப்பதாகவும் அமெரிக்கா சென்று இந்த படத்திற்காக உடல் தகுதியை பெற்று வந்ததாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் ரகசியமாக இந்த படத்தின் டெஸ்ட் படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இதில் சிம்புவின் கெட்டப் வேற லெவலில் இருந்ததாகவும் இந்த படத்தில் சிம்புவின் கெட்டப் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் சிம்புவின் ’எஸ்டிஆர் 48’ திரைப்படம் ரசிகர்களுக்கு திரையில் ஒரு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments