எஸ்.வி.சேகர் வீடு மீது கல்வீச்சு: பத்திரிகையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,April 20 2018]

நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து இன்று பத்திரிகையாளர்கள் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர்.

பின்னர் எஸ்வி சேகர் வீடு முன்பும் பத்திரிகையாளர்கள் பெருமளவில் கூடி எஸ்.வி.சேகர் வீட்டை விட்டு வெளியே வந்து பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்

இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென எஸ்.வி.சேகர் வீடு மீது மர்ம நபர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து எஸ்.வி.சேகர் வீட்டை முற்றுகையிட்டு ஆவேசமாக கோஷமிட்ட ஒருசில பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் இன்னும் பல பத்திரிகையாளர்கள் எஸ்வி சேகர் வீட்டின் முன் இருப்பதால் பரபரப்பு தொடர்ந்து கொண்டே உள்ளது.