நள்ளிரவில் கிரிக்கெட் காதல்… பிரபல வீரரின் மனைவி பகிர்ந்த வைரல் வீடியோ!

 

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நள்ளிரவு 1 மணிக்கு கிரிக்கெட் பயிற்சி எடுக்கும் வீடியோவை அவரது மனைவி டேனில் வில்ஸ் தன்னுடைய சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கிரிக்கெட் மீது ஸ்டீவ் ஸ்மித்துக்கு இவ்வளவு காதலா? என ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற ஆஷஸ் கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின்போது ஆஸ்திரேலிய அணிக்கு டிம் பெய்ன்தான் முதலில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் இளம்பெண் ஒருவருக்கு பாலியல் சம்பந்தமான குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் சிக்கியதால் கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டார்.

இதையடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ், துணை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து 5 போட்டிக்கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை முறியடித்தது. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்க்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டது.

இதையடுத்து ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் நியமிக்கப்பட்டு தற்போது விளையாடி வருகிறார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய 473 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து 236 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர்.

இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் 237 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய 239 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை எடுத்த நிலையில் மீண்டும் டிக்ளேர் செய்தது. இதையடுத்து 468 ரன்கள் என்ற இலக்குடன் தற்போது இங்கிலாந்து அணியினர் விளையாடி வருகின்றனர். மேலும் ஆஸ்திரேலிய பவுலர்களின் வேகப்பந்துகளில் சிக்கி இங்கிலாந்து வீரர்கள் தவித்து வருவதையும் பார்க்கமுடிகிறது. இதனால் ஆஷஸ் தொடரில் தற்போதுவரை ஆஸ்திரேலியாவின் ஆதிக்கமே நீடித்து வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நள்ளிரவு 1 மணிக்கு தன்னுடைய வில்லோ பேட்டை கூர்ந்து கவனித்து பயிற்சி எடுத்துக் கொள்கிறார். இதுகுறித்த வீடியோவை அவரது மனைவி டேனில் வில்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதையடுத்து ஸ்டீவ் ஸ்மித்தை பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் .