ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பு துண்டிப்பு! மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி
Send us your feedback to audioarticles@vaarta.com
தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அந்த பகுதி மக்கள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒட்டு மொத்த தமிழகம், எதிர்க்கட்சிகள் ஆகியவை இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று கூறப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் உச்சகட்டத்தில் உள்ளது. மேலும் இரண்டு நாட்களில் இந்த போராட்டத்தால் 13 அப்பாவிகள் மரணம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை அடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பை மின்சார வாரியம் இன்று அதிகாலை 5 மணிக்கு துண்டித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நடவடிக்கை ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதி கடந்த மார்ச் 31ஆம் தேதியோடு முடிவடைந்தது. இதனையடுத்து அனுமதியை புதுப்பிக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் தாக்கல் செய்திருந்த மனுவை மாசுகட்டுப்பாடு வாரியம் நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் ஸ்டெர்லைட் ஆலை மேலும் இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளை நிறுத்தும்படி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சமீபத்தில் உத்தரவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout