கமல், ரஜினி உள்பட திரையுலகினர்களுக்கு ஸ்டெர்லைட் அளித்த விளக்கங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என அந்த பகுதி மக்கள் கடந்த 50 நாட்களாக இரவும் பகலும் தீவிரமாக போராடி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி திரையுலகில் இருந்தும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன.
கமல், ரஜினி, ஆரி, ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஜிவி பிரகாஷ் உள்பட பல திரையுலக பிரபலங்கள் டுவிட்டரில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்த நிலையில், ஸ்டெர்லைட் நிர்வாகம் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜிவி பிரகாஷ், ஆரி, ஹிப் ஹாப் தமிழா ஆதி, விஜய், ஆகியோர்களுக்கு அதே டுவிட்டரில் ஒவ்வொருவருக்கும் பதிலளித்துள்ளது.
ரஜினிக்கு ஸ்டெர்லைட் அளித்த விளக்கத்தில் 'எங்களது நிறுவனத்தை பற்றி தவறான, பொய்யான தகவல்கள் உங்களுக்கு தரப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட்டால் கேன்சர் வரும் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் ஸ்டெர்லைட் உள்ள ஒரு கி.மீ சுற்றளவுக்குள் 20 ஆண்டாக வசிக்கின்றனர்' என்று கூறியுள்ளது. இதே போன்ற விளக்கத்தை மற்ற திரையுலகினர்களுக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Dear @rajinikanth, we feel that incorrect and untrue information may have reached you about our operations in Thoothukudi. It is our sincere hope that these #facts will give you the true picture and help develop a balanced opinion. #TruthAloneTriumphs #FactsMatter pic.twitter.com/uiRaNpIwVO
— Sterlite Copper (@sterlite_copper) April 1, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com