கமல், ரஜினி உள்பட திரையுலகினர்களுக்கு ஸ்டெர்லைட் அளித்த விளக்கங்கள்

  • IndiaGlitz, [Monday,April 02 2018]

தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என அந்த பகுதி மக்கள் கடந்த 50 நாட்களாக இரவும் பகலும் தீவிரமாக போராடி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி திரையுலகில் இருந்தும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன.

கமல், ரஜினி, ஆரி, ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஜிவி பிரகாஷ் உள்பட பல திரையுலக பிரபலங்கள் டுவிட்டரில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்த நிலையில், ஸ்டெர்லைட் நிர்வாகம் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜிவி பிரகாஷ், ஆரி, ஹிப் ஹாப் தமிழா ஆதி, விஜய், ஆகியோர்களுக்கு அதே டுவிட்டரில் ஒவ்வொருவருக்கும் பதிலளித்துள்ளது.

ரஜினிக்கு ஸ்டெர்லைட் அளித்த விளக்கத்தில் 'எங்களது நிறுவனத்தை பற்றி தவறான, பொய்யான தகவல்கள் உங்களுக்கு தரப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட்டால் கேன்சர் வரும் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் ஸ்டெர்லைட் உள்ள ஒரு கி.மீ சுற்றளவுக்குள் 20 ஆண்டாக வசிக்கின்றனர்' என்று கூறியுள்ளது. இதே போன்ற விளக்கத்தை மற்ற திரையுலகினர்களுக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

ரஜினி, கமல் படங்களை திரையிட விடமாட்டோம்: சொன்னது யார் தெரியுமா?

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரின் படங்களையும் கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட சலவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மெரீனாவில் திடீரென மூடப்பட்ட சர்வீஸ் சாலை: நடைப்பயிற்சி செல்வோர் அதிர்ச்சி

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசு மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ள நிலையில் எந்த நேரத்திலும் மீண்டுமொரு மெரீனா போராட்டம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

யார் இந்த பிங்கி லால்வானி? விஜய் மல்லையாவின் 3வது மனைவியா?

62 வயதாகும் விஜய் மல்லையாவையை திருமணம் செய்ய போவதாக கூறப்பபடும் பிங்கி லால்வானி விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங் பிஷர் ஏர்லைன்ஸில் ஏர் ஹோஸ்ட்ரஸாக பணிபுரிந்துள்ளார்.

இந்தியாவின் சக்தி வாய்ந்த 100 நபர்கள் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

பிரபல ஆங்கில நாளிதழ் இந்தியாவின் சக்திவாய்ந்த நபர்கள் என்ற 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 78வது இடத்தில் உள்ளார்.

பழம்பெரும் திரைப்பட இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் காலமானார்.

பழம்பெரும் இயக்குனர் சி.வி. ராஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் மரணம் அடைந்தார். மறைந்த பழம்பெரும் இயக்குனருக்கு கோலிவுட் திரையுலக பிரபலங்கல் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.