3500 ஒளியாண்டு தொலைவிற்கு செல்லும் ஸ்டீபன் ஹாக்கிங் குரல்
- IndiaGlitz, [Friday,June 15 2018]
இங்கிலாந்து நாட்டின் பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் காலமானர் என்பது தெரிந்ததே. அவரது உடல் முழு மரியாதையுடன் பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் விஞ்ஞானி ஸ்டீபனின் ஆராய்ச்சிகளில் முக்கியமானது பிளாக் ஹோல் என்பது ஆகும். 3500 ஒளியாண்டு தொலைவில் உள்ள பிளாக் ஹோல் ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். எனவே ஸ்டிபன் அவர்களுக்கு மரியாதை செல்லும் வகையில் அவரது உதவியாளர்கள் ஸ்டீபனின் குரலை பிளாக் ஹோலுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
ஸ்டீபன் உயிருடன் இருந்தபோது விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட பாடல் ஒன்றின் இடையே பேசியுள்ளார். இந்த பாடலை அவரது குரலுடன் ஐரோப்பா விண்வெளி நிலையத்தில் இருந்து செபிரியாஸ் என்ற ஆண்டனா வழியாக பூமியிலிருந்து 3 ஆயிரத்து 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பிளாக் ஹோலிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் அவரது குரல் விண்வெளியிலும் ஒலிக்கும் என்பது அவரது ஆதரவாளர்கள் அனைவருக்கும் கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி ஆகும்