கோவாவில் உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரரின் சிலை… எதற்கு தெரியுமா?

கோவா மாநிலத்தின் தலைநகரான பானாஜியில் உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரரும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வருபவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உருவச்சிலை நிறுவப்பட்டு இருக்கிறது.

410 கிலோ எடைக்கொண்ட இந்த சிலை கடந்த புதன்கிழமை நிறுவப்பட்டது. ஏற்கனவே கிறிஸ்டியானோவிற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் கோவாவில் இருவடைய சிலை நிறுவுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து அம்மாநில அமைச்சர் மைக்கேல் லோபோ விளக்கம் அளித்துள்ளனர்.

இன்றைய தலைமுறை இளைஞர்கள் பெரும்பாலும் இணையத்தில் நேரத்தைச் செலவழித்து வருகின்றனர். இதனால் படிப்பு மற்றும் உடல்நலம் குறித்த அக்கறையே இல்லாமல் இருக்கின்றனர். இந்நிலையில் இளைஞர்களுக்கு விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளூர் போட்டிகளில் அவர்களை கலந்து கொள்ள வைக்கவும் கிறிஸ்டியானோவில் சிலை நிறுவப்பட்டு உள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். மேலும் உள்ளூர் போட்டிகளை மேம்படுத்துவதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கோவா அரசின் இந்தச் செயலுக்கு கால்பந்து வீரர்கள் வரவேற்பு அளித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.