கொரோனாதேவிக்கு சிலை...! குட்டி உபி-யாக மாறுகிறதா கோவை....கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

கோவையில் கொரோனா தொற்று குணமாகும் என்ற சூழலில், கொரோனா தேவி என்ற சாமி சிலையை வடிவமைத்துள்ளனர் கிராம மக்கள்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், உலகளவில் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. முதியவர்கள் முதல் இளம் வயதினர் வரை பலரும் இந்த வைரஸ்-க்கு பலியாகி வருவதால், மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் கோவை, காமாட்சிபுரத்தில் கொரோனா தேவி சிலையை உருவாக்கி, அதை வணங்க துவங்கியுள்ளனர் கோவை மக்கள்.

காமாட்சிபுரத்தில் 51வது சக்தி பீடத்தில் இந்த சாமி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காமாட்சிபுரி ஆதீனம், ஸ்ரீ சிவலிங்கேஸ்வரா சுவாமிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

காலரா, பிளேக் போன்ற 400 வருடங்களுக்கு முன்பு வந்தபோது, பிளேக் மாரியம்மன் என்ற அம்மனை வைத்து வழிபட்டோம். அதேபோல் தற்போது கோவிட் மக்களை பெரிதும் பாதித்துள்ளதால், கொரோனாதேவியை வைத்து வழிபட உள்ளோம். கொரோனாவை குறைக்கும் நோக்கில், கடவுள் நம்பிகையில் சிலையை வைத்துள்ளோம். 48 நாட்களுக்கு மகா யாகம் நடத்தி கொரோனா தேவியை வழிபட உள்ளோம். பக்தர்களுக்கு அனுமதியில்லை, பூசாரிகள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. கோவை மக்கள் சாமி வைத்து வழிபடுவது குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். குட்டி உத்திரப்பிரதேசமா...? என கிண்டலடித்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஹேக்கர் கேரக்டரில் நடித்த தமன்னா: நாளை ரிலீஸ்

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா நடித்து முடித்துள்ள தொடர் 'நவம்பர் ஸ்டோரி'. இந்த தொடரின் படப்பிடிப்புகள் முடிவடைந்து மே 20ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில்

தடுப்பூசி போட்டு கொண்டது உண்மையா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா தரப்பு!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று தனது காதலர் விக்னேஷ் சிவன் அவர்களுடன் சென்று தனியார் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்றும்

'த்ரிஷ்யம்' குட்டிப்பாப்பாவா இது? வைரலாகும் கிளாமர் வீடியோ!

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய 'த்ரிஷ்யம்' திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்தது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தமிழ் உள்பட கிட்டத்தட்ட

தமிழகத்தில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி… முக்கியத் தகவல்!

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

டபுள் மாஸ்க் போடுங்க… வைரலாகும் முதல்வரின் விழிப்புணர்வு வீடியோ!

தீவிரம் பெற்றுவரும் கொரோனாவிற்கு எதிராகப் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு உள்ளார்.