கொரோனாதேவிக்கு சிலை...! குட்டி உபி-யாக மாறுகிறதா கோவை....கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

கோவையில் கொரோனா தொற்று குணமாகும் என்ற சூழலில், கொரோனா தேவி என்ற சாமி சிலையை வடிவமைத்துள்ளனர் கிராம மக்கள்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், உலகளவில் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. முதியவர்கள் முதல் இளம் வயதினர் வரை பலரும் இந்த வைரஸ்-க்கு பலியாகி வருவதால், மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் கோவை, காமாட்சிபுரத்தில் கொரோனா தேவி சிலையை உருவாக்கி, அதை வணங்க துவங்கியுள்ளனர் கோவை மக்கள்.

காமாட்சிபுரத்தில் 51வது சக்தி பீடத்தில் இந்த சாமி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காமாட்சிபுரி ஆதீனம், ஸ்ரீ சிவலிங்கேஸ்வரா சுவாமிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

காலரா, பிளேக் போன்ற 400 வருடங்களுக்கு முன்பு வந்தபோது, பிளேக் மாரியம்மன் என்ற அம்மனை வைத்து வழிபட்டோம். அதேபோல் தற்போது கோவிட் மக்களை பெரிதும் பாதித்துள்ளதால், கொரோனாதேவியை வைத்து வழிபட உள்ளோம். கொரோனாவை குறைக்கும் நோக்கில், கடவுள் நம்பிகையில் சிலையை வைத்துள்ளோம். 48 நாட்களுக்கு மகா யாகம் நடத்தி கொரோனா தேவியை வழிபட உள்ளோம். பக்தர்களுக்கு அனுமதியில்லை, பூசாரிகள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. கோவை மக்கள் சாமி வைத்து வழிபடுவது குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். குட்டி உத்திரப்பிரதேசமா...? என கிண்டலடித்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.