கோவையில் மாநில அளவில் ஜூனியர் தடகள போட்டி: 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு

  • IndiaGlitz, [Friday,August 05 2022]

கோவையில் எஸ்எம்எஸ் கல்வி குழுமம் சார்பில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. கோவை அத்லெடிக் குழுமம் மற்றும் கோவை எஸ்.என்.எஸ் கல்வி குழுமம் இணைந்து மாநில அளவிலான தடகளப் போட்டிகளை கோவை நேரு ஸ்டேடியத்தில் நடத்தின.

இப்போட்டியில் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 4 ஆயிரத்து 500 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் குண்டு எரியும் போட்டியில் ஹர்சவர்தர் 14.53 மீ எறிந்தார். அதேபோல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுமியருக்கான குண்டு எறிதல் போட்டியில் ஷைனி நித்திலா 12.19 மீட்டர் எறிந்தார். இருவரும் முதலிடம் பெற்றனர்.

18 வயதுக்கு உட்பட்ட சிறுமியர் 75 மீ ஓட்டத்தில் தன்யாவும், 14 வயதுக்கு உட்பட்ட சிறுமியருக்கான 600மீ ஓட்டத்தில் ஹன்சினியும் முதலிடம் பெற்று பரிசுகளை பெற்றனர்.

இந்த நிலையில் இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியது மட்டுமின்றி, அவர்கள் கண்டிப்பாக நேஷனல் லெவலில் பங்கேற்பார்கள் என்றும் கோவை எஸ்.என்.எஸ் கல்வி குழுமத்தினர் தெரிவித்துள்ளனர்.