ஸ்டார் விஜய்யில் வரும் பொங்கல் 2025 திருநாளை முன்னிட்டு புத்தம் புதிய திரைப்படங்கள்

  • IndiaGlitz, [Wednesday,January 08 2025]

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி இடத்தை வகிக்கும் விஜய் டிவி, பண்டிகை காலங்களில் விறுவிறுப்பான திரைப்பட ஒளிபரப்புகளின் மூலம் தனது ரசிகர்களுக்கு பரபரப்பான அனுபவத்தை வழங்குகிறது. நேர்த்தியான கேம் ஷோக்கள், பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகள், நெகிழ்ச்சியான தொடர்கள் என பலத்தன்மைகள் கொண்ட விஜய் டிவி, பண்டிகை நாட்களில் சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து ஒளிபரப்புவதிலும் தனித்தன்மையைக் காட்டுகிறது.

இந்த பொங்கல் 2025, விஜய் டிவி விறுவிறுப்பான திரைப்படங்களின் வரிசையுடன் அனுபவத்தை உங்கள் வீடுகளுக்கே கொண்டு வருகிறது. ‘வாழை’, ‘அமரன்’ மற்றும் ‘மெய்யழகன்’ ஆகிய உலக தொலைக்காட்சி முதல் வெளியீடுகளுடன், ‘அரண்மனை 4’ மற்றும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ போன்ற குடும்பப் பொழுதுபோக்கு படங்களும் உங்கள் பொங்கல் கொண்டாட்டங்களை அலங்கரிக்கவிருக்கின்றன.

பொங்கல் 2025 சிறப்பு திரைப்படங்கள்:

வாழைஜனவரி14, 12:30 PM

உலக தொலைக்காட்சி முதல் வெளியீடு:

மாறி செல்வராஜ் எழுதி இயக்கிய வாழை, இயக்குனரின் வாழ்க்கையில் இருந்து சில பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு உணர்ச்சிகரமான திரைப்படமாகும். பள்ளி மற்றும் வாழை தோட்ட வேலைகளை சமாளிக்கும் சிறுவனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இப்படம், கிராமப்புற வாழ்வின் சிக்கல்களையும் குழந்தைகளின் மனவலிமையையும் நெகிழ்ச்சியாக காட்டுகிறது.

அமரன்ஜனவரி14, 6:00 PM

உலக தொலைக்காட்சி முதல் வெளியீடு:
முக்கிய சரித்திர நாயகனான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு உணர்ச்சிகரமான திரைப்படம் அமரன். சிவகார்த்திகேயனும் சாய் பல்லவியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம், நாட்டின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட தியாகங்களை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்துகிறது.

அரண்மனைஜனவரி15, 11.30 AM

சுந்தர் சி இயக்கத்தில், அரண்மனை4 ஒரு காமெடி-ஹாரர் திரைப்படமாகும். பாரம்பரிய அரண்மனைக்கு குடிபோறும் குடும்பம், அதில் இருக்கும் பிணி ஆத்மாவின் மர்மங்களை வெளிக்கொண்டு வர முயற்சிக்கிறது. சுந்தர் சி, தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் நகைச்சுவையும் திகிலையும் கலந்த ஒரு பரபரப்பான அனுபவமாகும்.

மஞ்சும்மல் பாய்ஸ்ஜனவரி 15, 3:00 PM

சிதம்பரம் இயக்கத்தில் உருவாகிய மஞ்சும்மல் பாய்ஸ் ஒரு வாழ்க்கைமர்ம திரில்லர் திரைப்படமாகும். கோடைக்கானலில் சுற்றுலா செல்லும் நண்பர்கள் குழுவில்ஒரு நண்பன் பாதாள குகையில் விழுந்துவிடுகிறார்.அவரை காப்பாற்ற அவனது நண்பர்கள் மற்றும் மலைப்பைகுதியின் அதிகாரிகள் பாடுபடுகிறார்கள் . இறுதியில் என்ன நடந்தது அந்த முயற்சி வெற்றி பெற்றதா என்பதை சுவாரஸ்யமாக திரையமைக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம்.இந்த படம்இரசிகர்களை நெகிழ்ச்சியிலும் பரபரப்பிலும் மூழ்கடிக்கும்.

மெய்யழகன்ஜனவரி 15, 6:00 PM –

உலக தொலைக்காட்சி முதல் வெளியீடு: மெய்யழகன் சி. பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியமெய்யழகன், குடும்ப உறவுகளின் மதிப்பையும், நெகிழ்ச்சியையும் உணர்த்தும் திரைப்படமாகும். கார்த்தி மற்றும் அரவிந்த் சாமியின் அருமையான நடிப்புகள் இப்படத்திற்கு அழுத்தமான உணர்வை கொடுக்கின்றன.

விஜய் டிவியுடன் பொங்கலின் மகிழ்ச்சியை பகிர்ந்து, இந்த பரபரப்பான திரைப்படங்களுடன் உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள். பொங்கல் திருநாளின் சிறப்பை விஜய் டிவியுடன் கொண்டாடுங்கள்!

More News

2025 சனி பெயர்ச்சி: உங்கள் ராசிக்கு என்ன பலன்? பரிகாரங்கள் என்ன?

பிரபல ஜோதிடர் வீனஸ் பாலாஜி, ஆன்மீக கிளிட்ஸ் சேனலில் 2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி நடைபெற உள்ள சனி பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் ஏற்படும் மாற்றங்களை விரிவாக விளக்கியுள்ளார்.

அகத்தியா பட முதல் சிங்கிள் பாடல் வெளியானது !! 

அகத்தியா படத்தின் முதல் சிங்கிள் பாடல் “காற்றின் வைரல்” வெளியிடப்பட்டது

2 மாத இடைவெளியில் அஜித்தின் 2 படங்கள் ரிலீசா? அடுத்தடுத்த சர்ப்ரைஸ்..!

அஜித் கடந்த சில மாதங்களாக 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' ஆகிய இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இரண்டு படங்களுமே ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

'கூலி' அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்..! அரசியல் கேள்விக்கு அப்செட்டான பதில்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது 'கூலி' படத்தின் அப்டேட்டை கூறினார். ஆனால் அதே நேரத்தில் அரசியல் கேள்விகள்

ஆஸ்கார் விருது பட்டியலில் 'கங்குவா'.. எந்த பிரிவுக்கு விருது கிடைக்க வாய்ப்பு?

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.