ஸ்டார் விஜய் பிளாக்பஸ்டர் கேம் ஷோ 'கம்பெனி': ஒளிபரப்பாகும் தேதி, நேரம் அறிவிப்பு..!
- IndiaGlitz, [Friday,September 13 2024]
ஸ்டார் விஜய் ‘கம்பெனி’ என்ற தலைப்பில் புதுமையான கேம் ஷோவை தொடங்கவுள்ளது . இந்த புதிய கேம் ஷோ 15 செப்டம்பர் 2024 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.
இந்த விளையாட்டில் இரண்டு போட்டியாளர்கள் அல்லது இரண்டு அணிகள் 16 பெட்டிகளுக்கு எதிராக போட்டியிட்டு 5,00,000 ரூபாய் வரை வெல்ல வாய்ப்புள்ளது . இந்த விளையாட்டை தொடர்ந்து ஆடி ஆட்டத்தின் முடிவில் அதிகப் பணத்தைப் பெற்ற போட்டியாளர் வெற்றியாளராக இருப்பார்.
பத்தாயிரம் ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை பணம் மதிப்பு திரையில் காண்பிக்கப்படும் . போட்டியாளர்கள் தங்களின் திறமை மற்றும் அதிர்ஷ்டத்தைப் பயன்படுத்தி 5 லட்சம் வரை வெல்ல முடியும். 8 பணப்பெட்டிகள், 3 வெடிகுண்டு பெட்டிகள், 3 லேடி பாக்ஸ்கள் மற்றும் 2 எக்ஸ்சேஞ்ச் பாக்ஸ்கள் இந்த விளையாட்டில் இடம்பெறும்.
எக்ஸ்சேஞ் பாக்ஸ்:
இந்த எக்ஸ்சேஞ் பாக்ஸ் பெட்டியைத் தேர்ந்தெடுக்கும் போட்டியாளர் பணத்தை மாற்றிக் கொள்ள வாய்ப்பளிக்கும் . அடுத்த போட்டியாளருக்கு அந்த வாய்ப்பை அவர் வழங்கிவிடலாம் . மேலும், மற்ற போட்டியாளரிடமிருந்து பணம் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும் .
லேடி பாக்ஸ்: லேடி பாக்ஸைத் தேர்ந்தெடுத்தால், ஒரு பெண் மேடைக்கு வந்து, அதன் விலை தெரியாமல் சந்தையில் இருந்து ஒரு பொருளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் . அந்தப் பெண் போட்டியார் தேர்ந்தெடுத்த பொருளைத் பேரம் பேசி விற்க வேண்டும். பின்னரே அந்த பொருளின் உண்மையான விலை வெளியிடப்படும்.
பாம் பாக்ஸ்: முதல் இரண்டு பாம் பாக்ஸ் பெட்டிகளைத் தேர்ந்தெடுத்தால், போட்டியாளர் தங்கள் முறையைத் தவிர்த்து, அடுத்த போட்டியாளருக்கு அந்த வாய்ப்பை வழங்க முடியும் . மூன்றாவது பாம் பாக்ஸ் சை தேர்ந்தெடுத்தால் திறந்தவருக்கு 'பூஜ்ஜியம்' கிடைக்கும். அதிர்ஷ்டம் மற்றும் திறமையை அடிப்படையாகக் கொண்ட இந்த விளையாட்டு நிகழ்ச்சி சுவாரஸ்யமாக செல்லும் . இந்த நிகழ்ச்சியை ம கா பா ஆனந்த் தொகுத்து வழங்குகிறார். ‘கம்பெனி’ நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 1.30 மணிக்கு STAR VIJAY இல் ஒளிபரப்பாகும் .
யாருமே பார்த்திராத Different-ஆன Game Show 😀 Company - செப்டம்பர் 15 முதல் ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Company #MaKaPa #GameShow #VijayTV #VijayTelevision pic.twitter.com/hOMAIAPEi5
— Vijay Television (@vijaytelevision) September 10, 2024