2018 ஐபில் போட்டியில் முறியடிக்கப்பட்ட சாதனைகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக நடைபெற்ற ஐபிஎல் போட்டி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நேற்றைய இறுதி போட்டியில் சென்னை அணி ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை 3வது முறையாக வென்றது.;
இந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் 51 நாட்களில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது. அவை குறித்து தற்போது பார்ப்போம்
1. அதிவேக அரைசசதம் அடித்த வீர்ர்: கே.எல்.ராகுல், ஐபிஎல் தொடரின் மிக வேகமான அரைசதத்தை அடித்துள்ளார். அவர் டெல்லி அணிக்கு எதிராக நடந்த போட்டியில் வெறும் 14 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து புதிய சாதனை செய்துள்ளார். இதற்கு முன்னர் 15 பந்துகளில் அரைசதம் எடுத்ததே சாதனையாக இருந்தது
2. குறைந்த பந்துகளில் இரண்டு முறை அரைசதம்: இந்த சாதனையாஇ கொல்கத்தா அணியின் சுனில் நரேன் செய்துள்ளார். இவர் 17 பந்துகளில் இரண்டு முறை அரை சதம் அடித்துள்ளார்
3. குறைந்த வயதில் ஐபிஎல் போட்டியில் இடம் பெற்றவர்: இந்த சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் ஜாத்ரன் பெற்றுள்ளார். இவர் ஐபிஎல் போட்டியின் முதல் போட்டியை விளையாடும்போது 17 வயது 11 நாட்கள் என்ற வயதை உள்ளவராக இருந்தார்.
4. ஏழு ஐபிஎல் அணிகளிலும் இடம்பெற்றவர்: இந்த சாதனையை செய்துள்ளார். பின்ச். இந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய இவர் இதற்கு முன்னர் ராஜஸ்தான், டெல்லி, புனே, ஐதராபாத், மும்பை மற்றும் குஜராத் அணிகளில் இடம்பெற்றுள்ளார்.
5. ஒரே போட்டியில் அதிகபட்ச ரன்கள்: ஐபிஎல் போட்டி தொடரில் அதிகபட்ச ரன்களை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை டெல்லி அணியின் ரிஷாப் பேண்ட் பெற்றுள்ளார். இவர் ஐதராபாத் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காஆமல் 128 ரன்கள் எடுத்தார். இதற்கு முன்னர் சிஎஸ்கே அணியின் முரளி விஜய் 127 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன் ஆகும்
6. 90 ரன்களுக்கு மேல் அடித்த இரண்டு கேப்டன்; இந்த ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்ற பெங்களூர் மற்றும் மும்பை அணியின் கேப்டன்களான விராத்கோஹ்லி 92 ரன்களும், ரோஹித் சர்மா 94 ரன்களும் அடித்தனர்
7. ஒரே போட்டியில் அதிகபட்ச சிக்ஸர்கள்: சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இரு அணி வீரர்களும் சேர்ந்து 33 சிக்ஸர்கள் அடித்தது ஒரு சாதனையாக கருதப்படுகிறது. இதற்கு முன்னர் ஒரு போட்டியில் 31 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது
8. 100 போட்டிகளில் விளையாடிய இளம் வீர்ர்: ஐதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் இளவயதில் டி20 100 போட்டிகளில் விளையாடிய வீர்ர் என்ற சாதனையை பெற்றுள்ளார். மேலும் 100வது போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
9. அதிக ரன்கள் எடுத்த 7வது இட வீரர்: ஐபிஎல் போட்டியில் ஏழாவது இடத்தில் களமிறங்கி அதிகபட்ச ரன்களை எடுத்தவர் என்ற பெருமையை கொல்கத்தா வீரர் ஆண்ட்ரு ரஸல் பெற்றுள்ளார். இவர் சென்னை அணிக்கு எதிராக 36 பந்துகளில் 88 ரன்கள் குவித்து இந்த சாதனையை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் பிராவோ 68 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
10. கேப்டனாக 5000 ரன்கள் எடுத்த முதல் வீர்ர்: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டன் பொறுப்பில் உள்ள ஒருவர் 5000 ரன்கள் எடுத்தா சாதனையை நம்ம தல தோனி பெற்றுள்ளார்.
11. அதிக சதம் அடித்த ஐபிஎல் வீர்ர்: ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 21 சதங்கள் அடித்து அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை கிறிஸ்ட் கெய்லே பெற்றுள்ளார்
12. 100 விக்கெட்டுக்கள் எடுத்த முதல் வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் நரேன், கொல்கத்தா அணியில் விளையாடியவர். இவர் ஐபிஎல் போட்டிகளில் முதல்முறையாக 100 விக்கெட்டுக்கள் எடுத்த வெளிநாட்டு வீர்ர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ஹர்பஜன்சிங் 100 விக்கெட்டுக்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
13. காம்பீர் சாதனையை முறியடித்த கோஹ்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 53 அரை சதங்கள் அடித்து சாதனை செய்திருந்த காம்பீர் சாதனையை 54 அரை சதங்கள் அடித்து விராத் கோஹ்லி முறியடித்தார்
14. 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய ராஜ்புத்: சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் முக்கிய வீர்ர்கள் விக்கெட்டுக்கள் உள்பட 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை பஞ்சாப் அணியின் அங்கிட் ராஜ்புட் பெற்றுள்ளார். இவர் ஐதராபாத் அணியின் தவான், வில்லியம்சன், சஹா, மணிஷ் பாண்டே மற்றும் முகமது நபி ஆகியோர்களில் விக்கெட்டுக்களை ஏப்ரல் 26ஆம் தேதி போட்டியில் வீழ்த்தினார்
15.150 போட்டிகளில் கேப்டனாக விளையாடிய தல தோனி: தல தோனி 150 ஐபிஎல் போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ள சாதனையை பெற்றுள்ளார்.
16. 300 சிக்ஸர்கள் அடித்த ஒரே வீர்ர்: ஐபிஎல் போட்டியில் 300 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.
17. கேப்டனாக அதிகபட்ச ரன்கள் அடித்த தோனி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக அதிகபட்ச ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை காம்பீர் பெற்றிருந்த நிலையில் அந்த சாதனையை தல தோனி முறியடித்துள்ளார்
18. தொடர்ச்சியாக ஐந்து அரை சதங்கள் அடித்த வீரர்: ஐபிஎல் போட்டியில் தொடர்ச்சியாக ஐந்து சதங்கள் அடித்த வீர்ர் என்ற சாதனையை வைத்துள்ள வீரேந்திர சேவாக் சாதனையை ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் சமன்படுத்தியுள்ளார். அவர் இந்த தொடரில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் 67,51,82,95,94 ஆகிய ரன்கள் எடுத்துள்ளார்.
19. 500 ரன்களுக்கு மேல் 5 முறை அடித்த வீரர்: இதுவரை நடந்த 11 ஐபிஎல் போட்டிகளில் 5 முறை 500க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து சாதனை செய்துள்ளார். விராத்கோஹ்லி
20. ஐபிஎல் போட்டியில் விளையாடிய முதல் நேபாள் வீரர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடிய முதல் நேபாள் நாட்டின் வீரர் என்ற பெருமையை சந்தீப் லாமிச்சானே பெற்றுள்ளார்/
21. 17 வயதில் அதிகபட்ச ரன்களை அடித்த வீர்ர்: 17 வயது வீரர் ஒருவர் அதிகபடச் ரன்களான 114 ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை டெல்லி அணியின் அபிஷேக் ஷர்மா பெற்றுள்ளார்.
22. முதல் ஓவரில் அதிக ரன் எடுத்த வீரர்: ஐபிஎல் போட்டியில் முதல் ஓவரிலேயே 21 ரன்கள் எடுத்து முதல் ஓவரில் அதிக ரன் எடுத்த வீர்ர் என்ற சாதனை ஒன்றை கொல்கத்தா வீரர் சுனில் நரேன் சமன்படுத்தியுள்ளார். இதற்கு முன்னர் 2009ஆம் ஆண்டு ஓஜா முதல் ஓவரில் 21 ரன்கள் எடுத்திருந்தார்
22. 70 ரன்கள் கொடுத்த முதல் பந்துவீச்சாளர்: ஒரே போட்டியில் 70 ரன்கள் வாரி வழங்கிய வள்ளல் பட்டத்தை ஐதராபாத் அணி வீரர் தம்பி பெற்றுள்ளார் இவர் பெங்களூரு அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 70 ரன்கள் விட்டுக்கொடுத்தார்
23. அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட ஐபிஎல் போட்டி: இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் இந்த ஆண்டுதான் அதிகபட்ச சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடரில் மட்டும் 872 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது.
24. 100 பவுண்டரிகளை அடித்த விக்கெட் கீப்பர்: ஐபிஎல் தொடரில் 100 பவுண்டரிகளை அடித்த வீரர் என்ற சாதனையை ரிஷாப் பேண்ட் பெற்றுள்ளார்
25. அதிக கேட்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர்: ஐபிஎல் தொடரில் அதிகபட்ச கேட்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை தல தோனி பெற்றுள்ளார். இவர் இதுவரை 144 கேட்சுகளை பிடித்துள்ளார். இதற்கு முன்னர் சங்கரகரா 142 கேட்சுகளை பிடித்ததே சாதனையாக இருந்தது
26. 7 முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற சென்னை அணி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 9 தொடரில் மட்டுமே கல்ந்து கொண்ட சென்னை அணி 7 முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
27. 150 வெற்றிகள் பெற்று கொடுத்த கேப்டன்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 150 போட்டிகளை வெற்றியுடன் வழிநடத்தி சென்ற கேப்டன் என்ற பெருமையை சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பெற்றுள்ளார்.
28. அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்: தல தோனி ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்தா வீரர் என்ற சாதனையை செய்துள்ளார் இவர் 158 ஐபிஎல் போட்டிகளில் 186 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதற்கு முன்னர் சுரேஷ் ரெய்னா 185 சிக்ஸர்களும், ரோஹித் சர்மா 184 சிக்ஸர்களும் விராத் கோஹ்லி 178 சிக்ஸர்களும் அடித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout