ஹரிஷ் கல்யாண் அடுத்த படத்தில் நாயகியாகும் 'ஸ்டார்' நாயகி.. இயக்குனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,November 24 2024]

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் கவின் நடித்த ‘ஸ்டார்’ படத்தின் நாயகி ஹீரோயினாக நடிக்க இருப்பதாகவும் அதே போல் கவின் நடித்த படத்தை இயக்கியவர் தான் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘லப்பர் பந்து’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் 2024 ஆம் ஆண்டு வெற்றி படங்களில் இதுவும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘லப்பர் பந்து’ வெற்றியை எடுத்து ஹரிஷ் கல்யாண் அடுத்து கவின் நடித்த ’லிப்ட்’ படத்தை இயக்கிய இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் கவின் நடித்த ’ஸ்டார்’ படத்தில் நாயகியாக நடித்த ப்ரீத்தி முகுந்தன் என்பவர் தான் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இந்த படமும் வெற்றிப்படமாக படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.