ஸ்டார் கிரிக்கெட்: 8 அணிகளும் அவற்றின் கேப்டன்களும்
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ஏப்ரல் 17ஆம் தேதி பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் ஸ்டார் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பிரபல நட்சத்திரங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ள இந்த போட்டியில் மொத்தம் எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு அதன் கேப்டன்களும் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் எந்த அணிக்கு யார் கேப்டன்? என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சென்னை சிங்கம்ஸ் அணிக்கு சூர்யாவும், மதுரை காலேஜ் அணிக்கு விஷால் அவர்களும், கோவை கிங்ஸ் அணிக்கு கார்த்தியும், நெல்லை டிராகன்ஸ் அணிக்கு ஜெயம் ரவியும், ராம்நாடு ரினோஸ் விஜய் சேதுபதியும், தஞ்சை வாரியர்ஸ் அணிக்கு ஜீவாவும், சேலம் சேட்டாஸ் ஆர்யாவும், திருச்சி டைகர்ஸ் அணிக்கு சிவகார்த்திகேயனும் கேப்டன்களாக இருப்பார்கள். இவர்கள் தலைமையில் விளையாடும் வீர்ர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.
மேற்கண்ட அணிகளின் அறிமுகவிழா நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த அணிகளை சீயான் விக்ரம் அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com