நடிகர் சங்கத்தின் "ஸ்டார் கிரிக்கெட்" போட்டியின் முக்கிய விபரங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதில் இருந்தே நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவது குறித்த ஆலோசனைகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடத்திற்கு தேவையான நிதி திரட்டும் நடவடிக்கையில் நடிகர் சங்க நிர்வாகிகள் ஈடுபட்டுகொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த கட்டிடத்திற்கு நிதி திரட்ட ஸ்டார் கிரிக்கெட் போட்டி ஒன்று நடத்தப்படும் என்றும் அதில் அனைத்து முன்னணி நடிகர், நடிகைகளும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.,
இந்நிலையில் தற்போது இந்த போட்டி நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி "ஸ்டார் கிரிக்கெட்" போட்டி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஸ்டார் கிரிக்கெட் போட்டியில் இரண்டு அணிகள் விளையாடவுள்ளதாகவும் இரு அணிகளின் கேப்டன்கள் விவரங்கள் மற்றும் போட்டியில் கலந்து கொள்ளும் மற்ற வீரர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த போட்டியில் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com