நட்சத்திர தம்பதிகளின் கார் மீது மோதிய சரக்கு வாகனம்.. கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு!

  • IndiaGlitz, [Sunday,December 11 2022]

தெலுங்கு திரையுலகின் நட்சத்திர தம்பதிகள் மீது சரக்கு வாகனம் ஒன்று மோதிய நிலையில் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த நடிகை நபனிதா தாஸ் என்பவர் ஜீது கமல் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதியினர் தெலுங்கு திரையுலகில் நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் நபனிதா மற்றும் ஜீது கமல் காரில் சென்று கொண்டிருந்தபோது சரக்கு வாகனம் ஒன்று அவர்களின் கார் மீது மோதியது. இதனால் சரக்கு வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கும் நபனிதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் இருவரையும் கொலை செய்து விடுவதாக சரக்கு வாகனத்தில் இருந்த டிரைவர் மற்றும் உதவியாளர் கூறியது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நபனிதா குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இது குறித்து பதிவு செய்த வீடியோ ஆதாரத்துடன் போலீசில் நபனிதா புகார் அளித்த நிலையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் நபனிதா மற்றும் அவரது கணவர் மீது சரக்கு வாகனத்தின் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .
 

More News

முதல்முறையாக பிக்பாஸ் வீட்டில் கண்கலங்கிய கமல்ஹாசன்: நெகிழ்ச்சியான வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த ஆறு சீசன்களில் முதல் முறையாக கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் கண்கலங்கிய வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படம்.. அதிகாரபூர்வ அறிவிப்புடன் வெளியான மாஸ் போஸ்டர்!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு மாஸ் டைட்டில் போஸ்டரையும்

மந்திரங்களை கட் செய்த ரஜினிகாந்த்.. 'பாபா' ரீரிலீஸ் குறித்து ரசிகர்கள் ரியாக்சன் என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாபா' திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான நிலையில் 20 ஆண்டுகள் கழித்து மறுபடியும் எடிட் செய்யப்பட்டு இந்த படம் ரிலீசாகி உள்ளது. அடாத மழையிலும் ரஜினி

நான் சந்தோஷமாக வெளியே வரத்தயார்: கமலிடம் ஜனனி சொன்னது ஏன்?

பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களுக்கு மேல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் பட்டியலில் உள்ள குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர் வெளியேற்றப்பட்டு

'தளபதி 67' படத்தில் நடிக்கின்றேனா? விஷால் கூறிய மாஸ் தகவல்!

விஜய் நடிக்கும் 'தளபதி 67' திரைப்படத்தின் தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன என்பதும் குறிப்பாக இந்த படத்தில் நடிக்க இருக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன