ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த கணவன் - மனைவி நட்சத்திரங்கள்

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் குறித்த பட்டியல் ஒன்றை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருவது தெரிந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான புகழ் பெற்ற நட்சத்திரங்கள் பட்டியலில் தமிழ் நட்சத்திரங்களான ரஜினிகாந்த், ஏ ஆர் ரகுமான், விஜய், அஜித், இயக்குனர் ஷங்கர், கமலஹாசன், தனுஷ் ,இயக்குனர் சிவா மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இடம் பெற்றிருந்ததை ஏற்கனவே பார்த்தோம் 

இந்த நிலையில் இந்த பட்டியலில் கணவன் மனைவி ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 2019ஆம் ஆண்டு பிரபலங்களின் பட்டியலில் விராத் கோஹ்லி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா ஷர்மா இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில்  முதலிடத்தை விராத் கோலியும் 21 வது இடத்தை அனுஷ்கா சர்மாவும் பெற்றுள்ளனர்.

அதேபோல் ரன்வீர்சிங், தீபிகா படுகோன் நட்சத்திர தம்பதிகளும் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் ரன்வீர் சிங் 6-வது இடத்தையும் தீபிகா படுகோனே பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது