அமெரிக்கர்களை பூமியில் இருந்து வேறு கிரகத்திற்கு அனுப்ப பெண்டகன் திட்டம்
- IndiaGlitz, [Sunday,November 27 2016]
உலகின் நம்பர் ஒன் வல்லரசு நாடான அமெரிக்கா தங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பை கருதி பூமியில் இருந்து வேற்று கிரகத்திற்கு இடம்பெற செய்யும் திட்டம் இருப்பதாக பென்டகன் அமெரிக்க பாதுகாப்பு தலைமையக அதிகாரி வின்ஸ்டன் பியவுசெப் கூறியுள்ளார்.
சமீபத்தில் வாஷிங்டன் நகரில் அறிவியல் மாநாடு ஒன்றில் பேசிய வின்ஸ்டன் புயவுசெப், 'அமெரிக்காவின் செயற்கை கோள்கள் தாக்கி அழிக்கப்படுமானால், அமெரிக்காவுக்கு ஈடுசெய்ய முடியாத பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறினார். இதனால் அமெரிக்கர்களை பூமியைத் தவிர வேறு பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு அனுப்புவது முக்கியமான தேவையாகிள்ளது என்றும் வேறு எந்த கிரகத்திற்கு அனுப்புவது என்ற ஆய்வு நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
பூமிக்கு அருகிலேயே மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற பல கிரகங்கள் இருப்பதாகவும், அவற்றில் ஒன்றை தேர்வு செய்து அமெரிக்கர்களை அங்கு அனுப்ப ஆலோசனை நடந்து வருவதாகவும் அவர் இந்த மாநாட்டில் தெரிவித்தார். இந்த தகவல் மற்ற நாட்டு மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.