ஸ்டாலின் மகள் வீட்டில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை...!
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக தலைவரான முக. ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் ஐடி ரெய்டு நடந்துவருகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வருமானவரித்துறையினர் சந்தேகிக்கும் வகையில் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் அவர்களின் நண்பர்கள் வீட்டில் சோதனை நடத்தி வருகிறார்கள். பெரும்பாலும் எதிர்க்கட்சியினர் வீடுகளிலே இந்த ஐடி ரெய்டுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
அண்மையில் தான் திமுகவின் முக்கிய அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்கள், முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் ஐடி துறையினர் தீவிர சோதனை நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரான எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியில், முக.ஸ்டாலின் பிரச்சாரத்திற்காக தங்கியபோது வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.
இந்நிலையில் ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீடு, நீலாங்கரை, தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 8 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. திமுக சார்பாக அண்ணாநகர் தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர் மோகன் வீட்டிலும் சோதனை நடக்கின்றது. பணப்பட்டுவாடா பற்றி புகார் வந்துள்ளதால் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இச்சோதனையில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments