மு.க.ஸ்டாலின் சந்திப்பு எதிரொலி: ரகசிய வாக்கெடுப்புக்கு ஜனாதிபதி உத்தரவா?
- IndiaGlitz, [Thursday,February 23 2017]
தமிழக சட்டப்பேரவையில் கடந்த வாரம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஜனநாயக படுகொலை நடந்ததாகவும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை ஏற்காமல் தாங்கள் சபைக்காவலர்கள் மற்றும் போலீசாரால் வெளியேற்றப்பட்டதாகவும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் சற்றுமுன்னர் அவர் டெல்லியில் கடந்த சனியன்று நடந்த சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களிடம் விளக்கியுள்ளார். ஏற்கனவே தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களின் அறிக்கையை பெற்றுள்ள ஜனாதிபதி, தமிழக சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட கோருவார் என்று டெல்லி வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் ஜனாதிபதியை சந்தித்த பின்னர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி அவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.