வேலை வெட்டி இல்லாதவர் ஸ்டாலின்… முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காட்டம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 10 ஆம் தேதி திமுக சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற காணொலி காட்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயி வேடம் போடுகிறார். அவர் விவசாயி எனக் கூறிக்கொள்வது மகா பெரும் பொய்.
ஒரு விவசாயியாக இருந்தால் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டத் திருத்தங்களுக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும். ஆனால் அவர் அந்த 3 வேளாண் சட்டங்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார். விவசாயி என்றால் இப்படி செய்திருக்க முடியாது எனப் பேசினார். இந்தச் சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வியை எழுப்பினர்.
இக்கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு என்ன தொழில் என்று மறுகேள்வி எழுப்பினார். மேலும் எந்த தொழிலும் இல்லாமல் பிழைத்து வருபவர் திமுக தலைவர் ஸ்டாலின் என்றும் முதல்வர் காட்டமாகக் கருத்துக் கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து பேசிய முதல்வர், “விவசாயம்தான் எனது முதல் தொழில். எனது குழந்தை பருவத்தில் இருந்தே நான் விவசாயி. இது என் ஊர்க்காரர்கள் அனைவருககும் தெரியும். நான் எவ்வளவு கடின உழைப்பாளி என்பது அவர்களுக்கு தெரியும். நான் விவசாயி என்பதை உறுதிப்படுத்த ஸ்டாலின் எனக்கு சான்றிதழ் தரத் தேவையில்லை. மேலும் முதல்வராக இருக்கும்போதும் நான் தொடர்ந்து விவசாயம் செய்கிறேன். விவசாயி முதல்வர் என்பதால் நீர் மேலாண்மை திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தமிழகம் இந்தியாவிலேயே முதல் இடம் வகித்து வருகிறது.
மேலும் இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு 11 மருத்துவக் கல்லூரியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. பள்ளிகளை திறப்பது குறித்து அரசு ஆலோசித்து விரைவில் முடிவை அறிவிக்கும். தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்கு கூடுதல் நிலம் ஒதுக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும். மேலும் குடிமராமத்து பணிகள், பயிர் காப்பீட்டு திட்டம் போன்றவை முறையாகச் செயல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்து உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout