'பரியேறும் பெருமாள்' படத்திற்கு மு.க.ஸ்டாலின் - உதயநிதி வாழ்த்து
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்திற்கு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்த நிலையில் இந்த படத்தை பல அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டி படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் ஆகியோர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் தற்போது இந்த படத்தை பார்த்து படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். '"தலைவர் கலைஞர் பரியேறும் பெருமாளை பார்த்திருந்தால் கொண்டாடியிருப்பார் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதேபோல் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இரட்டை குவளையால் ஊர் என்றும் சேரி என்றும் பிரித்த நிலத்தில், அதே இரட்டை குவளையால் ஊரையும் சேரியையும் இணைத்து விட்டான் "பரியேரும் பெருமாள்" வாழ்த்து' என பதிவு செய்துள்ளார்.
இரட்டை குவளையால் ஊர் என்றும் சேரி என்றும் பிரித்த நிலத்தில் , அதே இரட்டை குவளையால் ஊரையும் சேரியையும் இணைத்து விட்டான் "பரியேரும் பெருமாள் " வாழ்த்துகள் @beemji @mari_selvaraj pic.twitter.com/Plv7ULwFQE
— Udhay (@Udhaystalin) October 5, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com