முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஸ்டாலின், அழகிரி திடீர் சந்திப்பு

  • IndiaGlitz, [Tuesday,August 07 2018]

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் சற்றுமுன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, முரசொலி செல்வம் ஆகியோர் கிரின்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பு எதனால் என்பது குறித்த தகவல் இல்லை

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவாக உள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது