'நான் கடவுளை சந்தித்துவிட்டேன்... அபூர்வ சந்திப்பு குறித்து எஸ்.எஸ் ராஜமெளலி டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக அளவில் பிரபலமாக இருக்கும் இரண்டு இயக்குனர்கள் நேருக்கு நேர் சந்தித்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே முடியாது. அப்படி ஒரு சந்திப்பு சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.
உலக புகழ்பெற்ற இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்கை உலக அளவில் தனது படங்களை பேச வைத்த இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி சந்தித்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இது குறித்து இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி தனது ட்விட்டர் பக்கத்தில் 'நான் கடவுளை சந்தித்து விட்டேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு திரை உலகை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் இந்த சந்திப்பு நடந்த நிலையில் இந்த சந்திப்பின்போது இருவருக்கும் இருக்கும் பரஸ்பர மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று தான் தெரிகிறது. மேலும் எஸ்எஸ் ராஜமெளலி தனது ட்விட்டரில் 'நான் கடவுளை சந்தித்து விட்டேன்’ என்று கூறியிருப்பது மகிழ்ச்சியின் உச்சகட்டமாக பார்க்கப்படுகிறது.
’ஜாஸ்’, ’ஜுராசிக் பார்க்’, ’தி டெர்மினல்’ உட்பட உலக அளவில் சூப்பர் ஹிட் படங்களை தந்த ஸ்டீபன் பெர்க்கை, ’பாகுபலி’, ’ஆர்.ஆர்.ஆர்’ போன்ற உலகப் புகழ் பெற்ற படங்களை இயக்கிய எஸ்எஸ் ராஜமெளலியின் இந்த சந்திப்பு சினிமா வரலாற்றில் குறிப்பிட வேண்டிய ஒரு முக்கிய நிகழ்வாகும்.
இந்த நிலையில் இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி அடுத்ததாக மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
I just met GOD!!! ❤️🔥❤️🔥❤️🔥 pic.twitter.com/NYsNgbS8Fw
— rajamouli ss (@ssrajamouli) January 14, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments