'நான் கடவுளை சந்தித்துவிட்டேன்... அபூர்வ சந்திப்பு குறித்து எஸ்.எஸ் ராஜமெளலி டுவிட்!

  • IndiaGlitz, [Saturday,January 14 2023]

உலக அளவில் பிரபலமாக இருக்கும் இரண்டு இயக்குனர்கள் நேருக்கு நேர் சந்தித்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே முடியாது. அப்படி ஒரு சந்திப்பு சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.

உலக புகழ்பெற்ற இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்கை உலக அளவில் தனது படங்களை பேச வைத்த இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி சந்தித்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இது குறித்து இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி தனது ட்விட்டர் பக்கத்தில் 'நான் கடவுளை சந்தித்து விட்டேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு திரை உலகை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் இந்த சந்திப்பு நடந்த நிலையில் இந்த சந்திப்பின்போது இருவருக்கும் இருக்கும் பரஸ்பர மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று தான் தெரிகிறது. மேலும் எஸ்எஸ் ராஜமெளலி தனது ட்விட்டரில் 'நான் கடவுளை சந்தித்து விட்டேன்’ என்று கூறியிருப்பது மகிழ்ச்சியின் உச்சகட்டமாக பார்க்கப்படுகிறது.

’ஜாஸ்’, ’ஜுராசிக் பார்க்’, ’தி டெர்மினல்’ உட்பட உலக அளவில் சூப்பர் ஹிட் படங்களை தந்த ஸ்டீபன் பெர்க்கை, ’பாகுபலி’, ’ஆர்.ஆர்.ஆர்’ போன்ற உலகப் புகழ் பெற்ற படங்களை இயக்கிய எஸ்எஸ் ராஜமெளலியின் இந்த சந்திப்பு சினிமா வரலாற்றில் குறிப்பிட வேண்டிய ஒரு முக்கிய நிகழ்வாகும்.

இந்த நிலையில் இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி அடுத்ததாக மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஆர்ஜே பாலாஜியின் மனைவி குழந்தைகளை பார்த்து இருக்கிறீர்களா? இதோ செம புகைப்படங்கள்!

எப்.எம் வானொலியில் ஆர்ஜே வாக இருந்து அதன் பின்னர் தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக நடித்த ஆர்ஜே பாலாஜி, அதன்பின் ஹீரோ, இயக்குனர் என அடுத்தடுத்து புரமோஷன் பெற்று வருகிறார்.

பார்த்திபனின் அடுத்த படத்தின் கவிதைத்தனமான டைட்டில்!

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனின் 'இரவின் நிழல்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து பாசிட்டிவ் வசனங்கள் குவிந்தது

ரம்யா பாண்டியனின் கிளாமருக்கு கிடைத்த பலன்.. பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் ஒப்பந்தம்!

திரையுலகில் வாய்ப்பு கிடைக்காத பல நடிகைகள் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து, திரை உலகினர் மற்றும் ரசிகர்களின்

'துணிவு' படம் வெற்றி.. உடனே மலையேறிய எச் வினோத்!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று உள்ளது என்றும் இந்த படத்தின் இரண்டு நாள் வசூல் கிட்டத்தட்ட 100 கோடியை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. 

'உன்னை காண ஆவலுடன் வருகிறேன்'.. விக்னேஷ் சிவனின் பதிவு வைரல்

 'உன்னை காண ஆவலுடன் வருகிறேன்' என இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவு செய்த புகைப்படத்துடன் கூடிய இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.