மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டம் குறித்து எஸ்.எஸ்.ராஜமௌலியின் மாஸ் பதிவு.. இணையத்தில் வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனி ஒருவனாக மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெறச் செய்தது கிரிக்கெட் வரலாற்றிலேயே முத்திரை பதிக்கும் ஒரு போட்டியாக கருதப்பட்டது. இந்த நிலையில் இந்த போட்டி குறித்து ’பாகுபலி’ இயக்குனர் எஸ எஸ் ராஜமெளலி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்கள் குவித்தது. 292 என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா விளையாடிய போது சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது. ஒரு கட்டத்தில் ஏழு விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா 97 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது
ஆனால் மேக்ஸ்வெல் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் இணைந்து புதிய வரலாற்று சாதனை படைத்தனர். பேட் கம்மின்ஸ் ஒருபக்கம் விக்கெட்டை பாதுகாத்துக் கொள்ள இன்னொரு பக்கம் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 201 ரன்கள் அடித்தார். இடையில் அவருக்கு காலில் அடிபட்ட போதிலும் ரன்கள் ஓடாமல் சிக்சர்களையும் பவுண்டரிகளையும் விளாசி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
இந்த வெற்றி குறித்து பிரபல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்தை தெரிவித்து வரும் நிலையில் பாகுபலி இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து பதிவு செய்துள்ளார். மேக்ஸ்வெல் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள், நான் பார்த்த மிகப்பெரிய இன்னிங்ஸ் என்று கூறியுள்ளார்.
MAAADDD MAAAXXXX.
— rajamouli ss (@ssrajamouli) November 7, 2023
The greatest innings I ever saw...🙏🏽🙏🏽👍🏼
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com