தமிழகத்தில் கோவில் கோவிலாக சுற்றுப்பயணம்: எஸ்.எஸ்.ராஜமௌலியின் நெகிழ்ச்சியான அனுபவம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் செய்த பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தனது நெகிழ்ச்சியான அனுபவம் குறித்து சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
‘பாகுபலி’ ‘பாகுபலி 2’ ‘ஆர்.ஆர்.ஆர்’ உட்பட பல பிரமாண்டமான படங்களை இயக்கியவர் எஸ்.எஸ்.ராஜமெளலி . இந்த நிலையில் கடந்த மாதம் தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களுக்கு தனது குடும்பத்துடன் எஸ்.எஸ்.ராஜமெளலி சுற்றுப்பயணம் செய்த அனுபவத்தை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நீண்ட நாளாக சாலை பயணம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் தற்போது நிறைவேறி உள்ளது. அதை நிறைவேற்றிய எனது மகளுக்கு நன்றி. ஜூன் கடைசி வாரத்தில் ஸ்ரீரங்கம், தாராசுரம், பிரகதீஸ்வரர் கோயில், ராமேஸ்வரம், தூத்துக்குடி. மதுரை போன்ற இடங்களுக்கு சென்றோம்.
ஒரு சில நாட்களில் சில முக்கிய இடங்களை மட்டுமே எங்களால் பார்க்க முடிந்தது. நேர்த்தியான கட்டிடக்கலை, அற்புதமான பொறியியல் கலையுடன் கூடிய பாண்டியர்கள் சோழர்கள் மற்றும் நாயக்கர்கள் கட்டிடக்கலை பார்த்து வியந்தேன், அதை பார்த்ததும் அன்றைய ஆட்சியாளர்களின் ஆன்மீக சிந்தனை உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தது.
ராமேஸ்வரத்தில் உள்ள ஹோட்டல் முருகன் மெஸ்ஸில் சாப்பிட்டோம். உணவு மிகவும் அருமையாக இருந்தது. ஒரு வாரத்தில் எடையும் அதிகரித்து விட்டேன். மூன்று மாத வெளிநாட்டு பயணத்திற்கு பின்னர் இந்த தமிழக சுற்றுப்பயணம் எனக்கு புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்தை அளித்தது’ என்று எஸ்.எஸ்.ராஜமௌலி தெரிவித்துள்ளார்.
Wanted to do a road trip in central Tamilnadu for a long time. Thanks to my daughter who wanted to visit temples, we embarked upon it. Had been to Srirangam, Darasuram, Brihadeeswarar koil, Rameshwaram, Kanadukathan, Thoothukudi and Madurai in the last week of June . Could only… pic.twitter.com/rW52uVJGk2
— rajamouli ss (@ssrajamouli) July 11, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments