'ஆர்.ஆர்.ஆர் 2': எஸ்.எஸ்.ராஜமெளலி கூறிய சூப்பர் தகவல்!

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் ராஜமௌலி கூறிய தகவல் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கான், ஆலியா பட் உள்பட பலரது நடிப்பில் உருவான திரைப்படம் ’ஆர்.ஆர்.ஆர்’ . ரூ.550 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்த படம் உலகம் முழுவதும் 1200 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த ’ஆர்.ஆர்.ஆர்’ 2ஆம் பாகத்தை விரைவில் உருவாக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்ட நிலையில் தற்போது இது குறித்த கேள்வி ஒன்றுக்கு எஸ்.எஸ்.ராஜமெளலி பதில் கூறியுள்ளார். நானும் என்னுடைய தந்தை விஜயேந்திர பிரசாத் அவர்களும் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அடுத்த பாகம் குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். விரைவில் இந்த படத்தின் பணிகள் தொடங்கப்படும். விஜயேந்திர பிரசாத் அவர்கள் இரண்டாம் பாகத்தை கதையை எழுதி வருவதாகவும் கூறியுள்ளார். எனவே இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அமேசான் காடுகளில் நடக்கும் சம்பவங்கள் குறித்த இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.