பாகிஸ்தானால் எனது கனவு நனவாகவில்லை. பிரபல தொழிலதிபருக்கு எஸ்.எஸ்.ராஜமெளலி தந்த தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிந்து சமவெளி நாகரிகம் குறித்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி திரைப்படம் எடுக்க வேண்டும் என பிரபல தொழிலதிபர் வேண்டுகோள் விடுத்த நிலையில் பாகிஸ்தானால் தனது கனவு நனவாகவில்லை என்று இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தனது சமூக வலைதளத்தில் அந்த தொழிலதிபருக்கு பதிலாக பதிவு செய்துள்ளார்
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பல சமூக மற்றும் சமுதாய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவருக்கு கிடைத்த சிந்து சமவெளி நாகரிகம் குறித்த புகைப்படத்தை பதிவு செய்து, இந்த புகைப்படத்தை பார்க்கும் போது சிந்து சமவெளி நாகரிகம் குறித்த ஒரு ஆழமான புரிதலுடன் கூடிய ஒரு திரைப்படத்தை எஸ்.எஸ்.ராஜமெளலி எடுத்தால் அது பலருக்கு விழிப்புணர்வாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த எஸ்.எஸ்.ராஜமெளலி, ‘மகதீரா’ திரைப்படம் எடுக்கும் போது தோலாவிரா என்ற பகுதியில் ஒரு பழமையான மரத்தை பார்த்தேன். அது மிகவும் சிதைந்து போயிருந்தது. அப்போது தான் சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை அந்த ஒரே ஒரு மரத்தின் மூலம் விவரிக்கும் வகையில் ஒரு திரைப்படத்தை எடுக்கும் ஐடியா எனக்கு தோன்றியது. ஆனால் அதன்பின் பாகிஸ்தானுக்கு சென்றபோது மொகஞ்சதாரோ செல்ல எனக்கு அனுமதிக்க கிடைக்கவில்லை, அதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Yes sir… While shooting for Magadheera in Dholavira, I saw a tree so ancient that It turned into a fossil. Thought of a film on the rise and fall of Indus valley civilization, narrated by that tree!!
— rajamouli ss (@ssrajamouli) April 30, 2023
Visited Pakistan few years later. Tried so hard to visit Mohenjodaro. Sadly,… https://t.co/j0PFLMSjEi
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments