பாலிவுட் திரைப்படங்களின் தோல்விக்கு இந்த ஒரு காரணம் தான்.. எஸ்.எஸ்.ராஜமெளலி

  • IndiaGlitz, [Saturday,December 17 2022]

கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் திரைப்படங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து கொண்டிருப்பதற்கு இந்த ஒரு காரணம் தான் என பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான், அமீர்கான், அக்சயகுமார் உள்பட பல பாலிவுட் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்து வருகின்றன என்பதும் இதனால் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்தை உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் தென்னிந்தியாவில் வெளியான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர்., விக்ரம், பொன்னியின் செல்வன், காந்தாரா, கேஜிஎப் 2 ஆகிய திரைப்படங்கள் வசூலில் சாதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாலிவுட் திரைப்படங்கள் தோல்வி குறித்து இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி கூறியபோது 'பாலிவுட் சினிமா தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் இருக்கிறது என்றும் அதனால் நடிகர்களும் இயக்குனர்களும் ஏராளமாக சம்பளம் பெறுகிறார்கள் என்றும் அதிக சம்பளம் கிடைப்பதால் அவர்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற பசி குறைந்து விட்டது என்றும் அதனால்தான் படங்கள் தோல்வி அடைகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு திரைப்படத்தை வெற்றிப் படமாக்க வேண்டும் என்றால் பார்வையாளர்களின் மனதை புரிந்து கொண்டு அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை புரிந்து கொண்டு இயக்கினால் மட்டுமே வெற்றி என்ற மந்திரம் கிடைக்கும் என்றும் கூறினார்.

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை இந்த ஆண்டு நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது என்றும் இதே நிலை பாலிவுட் திரை உலகினர் வர வேண்டுமென்றால் அவர்கள் சற்று அதிகமாக நீந்த வேண்டும் என்றும் இல்லையென்றால் மூழ்கி விடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.