'ஆர்.ஆர்.ஆர்' படத்தை எஸ்.எஸ்.ராஜமவுலி எங்கே பார்த்தார் தெரியுமா? ஆச்சரியத்தில் பொதுமக்கள்!

பிரமாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 1,000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.

’ஆர்.ஆர்.ஆர்’  படம் ஒரிஜினல் ஹிந்தி படங்களின் வசூலை பாலிவுட்டில் முறியடித்து சாதனை செய்தது என்பதும் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் சுதந்திர போராட்ட வீரர்களான கொமாரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜூ ஆகிய இருவரையும் இணைத்து உருவாக்கப்பட்ட கதை என்பதும், இந்த கதைக்கு மிகப்பெரிய பலம் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதாபாத்திரங்களில் ஒன்றான கொமாரம் பீமின் சொந்த ஊரான ஆசிபாபாத் என்ற பகுதிக்கு தனது மனைவியுடன் சென்று இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி  படம் பார்த்து உள்ளார். படம் பார்த்து முடிந்ததும் அங்கிருந்து மக்களுடன் உரையாடி கொமாரம் பீமின் சொந்த ஊரில் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். 

இந்த படம் படமாக்கப்பட்டு கொண்டிருக்கும் போதே இந்த பகுதி மிகவும் பிரபலமாக மாறி விட்டது என்பதும் சமீபத்தில்தான் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் திரையிடுவதற்காகவே இந்த பகுதியில் திரையரங்கம் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.