புலியை பிடிக்கணும்ன்னா வேட்டைக்காரன் வேணும்: 'ஆர்.ஆர்.ஆர்.' டிரைலர்

  • IndiaGlitz, [Thursday,December 09 2021]

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில், ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகிய ‘ஆர்.ஆர்.ஆர்.’ என்ற திரைப்படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

3 நிமிடங்களுக்கும் அதிகமாக இருக்கும் இந்த டிரைலரில் எஸ்எஸ் ராஜமவுலியின் பிரம்மாண்டம், ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆரின் ஆவேசமான நடிப்பு, கற்பனைக்கு எட்டாத வகையில் உள்ள ஆக்ஷன் காட்சிகள் ஆகியவை உள்ளன.

குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மதன் கார்க்கியின் ஒவ்வொரு வசனமும் இந்த படத்தை பார்க்கத் தூண்டுவது போல் உள்ளது.

’புலியை பிடிக்க வேண்டுமென்றால் வேட்டைக்காரன் வேண்டும்’

’பணம் நகையை விட விலை உயர்ந்தது உன் நட்பு, எனக்கு அது போதும், என் உயிரையே தருவேன்’

’அஞ்சி அஞ்சி, நடுங்கி நடுங்கி இருந்தது போதும், காட்டாறு போல போகவேண்டும்’

’இந்த நரிகளை வேட்டையாடி என்ன செய்யப்போகிறோம், கொம்போட அலைகிற பேயை கொல்லலாமா’ ஆகிய வசனங்கள் இந்த படத்தின் எதிர்ப்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.

எஸ் எஸ் ராஜமவுலி அவர்களின் பிரம்மாண்டமான இயக்கம், செந்தில்குமார் அவர்களின் அபாரமான ஒளிப்பதிவு மற்றும் எம்.எம்.கீரவாணியின் பின்னணி இசை ஆகியவை அனைத்து அம்சங்களும் மிகச் சிறப்பாக இருக்கும் இந்த படம் ’பாகுபலி’, ‘பாகுபலி 2’ அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.