close
Choose your channels

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் 'பொன்னியின் செல்வன்' ஹீரோ: வேற லெவலில் பிரமாண்டம்!

Sunday, October 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த திரைப்படத்தில் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த ஹீரோ நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

’பாகுபலி’ ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு பிரம்மாண்டமான படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த நிலையில் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிக்க இருப்பதாகவும் இந்த படம் ஹாலிவுட்டுக்கு இணையாக பிரமாண்டமான படம் என்றும் இது ஒரு அட்வென்சர் படம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ‘பொன்னியின் செல்வன்’ நாயகன் வந்தியத்தேவன் கேரக்டரில் நடித்த கார்த்தியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கார்த்தியும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஆலியா பட் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுவதால் இந்த படம் வேற லெவல் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

’பாகுபலி’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்களைவிட இந்த படம் மிக பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் வசூலில் புதிய சாதனை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment