எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் 'பொன்னியின் செல்வன்' ஹீரோ: வேற லெவலில் பிரமாண்டம்!

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த திரைப்படத்தில் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த ஹீரோ நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

’பாகுபலி’ ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு பிரம்மாண்டமான படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த நிலையில் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிக்க இருப்பதாகவும் இந்த படம் ஹாலிவுட்டுக்கு இணையாக பிரமாண்டமான படம் என்றும் இது ஒரு அட்வென்சர் படம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ‘பொன்னியின் செல்வன்’ நாயகன் வந்தியத்தேவன் கேரக்டரில் நடித்த கார்த்தியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கார்த்தியும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஆலியா பட் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுவதால் இந்த படம் வேற லெவல் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

’பாகுபலி’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்களைவிட இந்த படம் மிக பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் வசூலில் புதிய சாதனை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

More News

தனுஷ், விஜய்யை அடுத்து 'காந்தாரா' படத்தை பார்த்து வியந்த அஜித்-விஜய் நாயகி!

கன்னடத்தில் உருவான 'காந்தாரா' என்ற திரைப்படம் கர்நாடகாவில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் வெறும் 16 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை 100

சென்னை அண்ணா சாலையில் 'துணிவு' படப்பிடிப்பு.. அஜித் கலந்து கொண்டாரா?

அஜித் நடித்துவரும் 'துணிவு' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக தாய்லாந்தில் நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தாக தகவல் வெளியானது.

பிக்பாஸில் இப்படி ஒருவர் இல்லாமலே இருந்திருக்கலாம்.. ஒரே ஒருவரை குறி வைக்கும் சக போட்டியாளர்கள்!

இப்படி ஒரு போட்டியாளர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இல்லாமல் இருந்திருக்கலாம் என்றால் எந்த போட்டியாளரை நீங்கள் குறிப்பிடுவீர்கள் என கமல்ஹாசன் கேட்கும் கேள்வி இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில்

சூப்பர் ஸ்டார் ரஜினியை திடீரென சந்தித்த திமுக எம்.எல்.ஏ.. என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பிற்கு திமுக எம்எல்ஏ ஒருவர் உதவி செய்ததாகவும் அதன் பின் படப்பிடிப்பு தளத்தில் திமுக எம்எல்ஏ ரஜினிகாந்தை சந்தித்து

லைகாவிடம் ரூ.300 கோடி சம்பளம் வாங்கினாரா ரஜினிகாந்த்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அடுத்து நடிக்க இருக்கும் இரண்டு படங்களுக்கும் சேர்த்து லைகா நிறுவனத்திடம் ரூபாய் 300 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக திரையுலகில் ஒரு செய்தி பரவி பரபரப்பை