'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் புதிய டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த படம் வரும் ஜனவரி மாதம் 8ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் ஒருசில காரணங்களால் டிரைலர் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது ’ஆர்.ஆர்.ஆர்’ டிரைலர் ரிலீஸ் தேதி மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் இந்த படத்தின் டிரைலரை காண மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா, அஜய்தேவ்கான், ஆலியாபட், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சுமார் 400 கோடியில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#RRRTrailer out on December 9th. ????
— RRR Movie (@RRRMovie) December 4, 2021
Gear up for a massive explosion ??#RRRTrailerOnDec9th #RRRMovie @ssrajamouli @tarak9999 @AlwaysRamCharan @mmkeeravaani @ajaydevgn @aliaa08 @oliviamorris891 @RRRMovie @DVVMovies pic.twitter.com/OXlpUsQYic
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com