எஸ்.எஸ்.ராஜமவுலியின் உதவி இயக்குனராகிறார் நானி?

  • IndiaGlitz, [Thursday,May 05 2016]

'பாகுபலி' இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தான் இயக்கும் ஒருசில படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டும் தோன்றுவார் என்பது அனைவரும் அறிந்ததே. பாகுபலி' படத்தில் கூட 'மனோஹரி' என்ற பாடலுக்கு சற்று முன்னர் ஒருசில நொடிகள் மட்டுமே தோன்றும் ஒரு கேரக்டரில் வருவார்.


இந்நிலையில் நானி நடிக்கும் ஒரு படத்தில் இயக்குனராகவே எஸ்.எஸ்.ராஜமவுலி நடிக்க சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் Virinchi Varma அவர்கள் இயக்கவுள்ள ஒரு தெலுங்கு படத்தில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்குனராகவும், நானி உதவி இயக்குனராகவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருசில நிமிடங்கள் மட்டுமே வரும் இந்த கேரக்டரில் நடிக்க ராஜமவுலி ஒப்புக்கொண்டதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.