'ஆர்.ஆர்.ஆர்' டிரைலர் தேதியை அறிவித்த எஸ்.எஸ்.ராஜமெளலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில்கூட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி பாடல் ரிலீஸ் ஒன்றுக்காக சென்னை வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் அடுத்த கட்டமாக ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் டிரைலர் வரும் 3ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.
ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா, அஜய்தேவ்கான், ஆலியாபட், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சுமார் 400 கோடியில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
DECEMBER 3rd… RRR Trailer Day… #RRRTrailer #RRRTraileronDec3rd #RRRMovie pic.twitter.com/qAqk7Pi0Ra
— rajamouli ss (@ssrajamouli) November 29, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout