எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' ரிலீஸ் தேதி இதுவா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாக்கிய திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ என்பதும் இந்த படம் கடந்த 7ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில் திரையரங்குகளுக்கு திடீரென விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் ’கேஜிஎப் 2’ உள்பட ஒரு சில பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதியும் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் ஏப்ரல் 29-ஆம் தேதி ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதற்குள் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
ஏற்கனவே கர்நாடகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் முழு ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது என்பதும் தமிழகம் உள்பட மேலும் சில மாநிலங்களில் மார்ச் மாதத்திற்குள் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் விஜய்யின் ‘பீஸ்ட்’, யாஷின் ‘கேஜிஎப் 2’ ஆகிய படங்கள் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இரண்டு வார இடைவெளியில் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ஏப்ரல் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகலாம் என்றும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஜித்தின் ’வலிமை’ படத்தின் ரிலீஸ் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
If the pandemic situation in the country gets better and all theatres open up to operate at full capacity,#RRRMovie will release on 18th Mar 2022
— Lyca Productions (@LycaProductions) January 21, 2022
Otherwise,
RRR Movie will release on 28th Apr 2022????@ssrajamouli @tarak9999 @AlwaysRamCharan @RRRMovie @DVVMovies@lycaproductions pic.twitter.com/liPh8d2Jjy
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments