எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் அட்டகாசமான 'உயிரே' பாடல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை வந்த இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி அவர்கள் ’உயிரே’ என்று தொடங்கும் பாடலை வெளியிட்டு உள்ளார் என்பதும் அந்த பாடல் இணையதளங்களில் சற்று முன் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மரகதமணி இசையில் மதன் கார்க்கியின் பாடல் வரிகளில் மரகதமணி மற்றும் குழுவினர் பாடிய இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராம் சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கான், ஸ்ரேயா சரண், அலியாபட் உள்ளிட்ட பலரின் காட்சிகள் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளது என்பதும் இந்த பாடலை பார்க்கும் போதே படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
The highly emotional video song of #Uyire is all set to stir hearts#RRRSoulAnthem,conceived by @ssrajamouli & composed by @mmkeeravaani out now!https://t.co/7zVrGHWrkG@tarak9999 @AlwaysRamCharan @ajaydevgn @aliaa08 @DVVMovies @RRRMovie @LycaProductions @LahariMusic @TSeries pic.twitter.com/2D3wU5VJh2
— Lyca Productions (@LycaProductions) November 26, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com