'ஆர்.ஆர்.ஆர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு; 'டான்' ரிலீஸ் தேதி மாறுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் தேஜா நடிப்பில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி ரிலீசாக இருந்த நிலையில் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு மற்றும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் இந்த படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு மீண்டும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
ஏற்கனவே இன்று காலை சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ’டான்’ திரைப்படம் மார்ச் 25-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே நாளில் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படமும் ரிலீஸ் ஆவதால் ’டான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாறுமா? அல்லது அறிவிக்கப்பட்ட அதே தினத்தில் ரிலீஸ் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா, அஜய்தேவ்கான், ஆலியாபட், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சுமார் 400 கோடியில் தயாராகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#RRRonMarch25th, 2022... FINALISED! ???? #RRRMovie pic.twitter.com/hQfrB9jrjS
— RRR Movie (@RRRMovie) January 31, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com