close
Choose your channels

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் அட்டகாசமான போஸ்டர்!

Friday, March 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகிவரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த போஸ்டரில் ராம்சரண் தேஜா வானத்தை நோக்கி வில்லால் அம்பு விடுவது போன்றும் அட்டகாசமான செக்கச் செவேலென்ற பின்னணியும் உள்ளது. இந்த போஸ்டருக்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போஸ்டரில் எஸ்எஸ் ராஜமவுலி கூறியுள்ளதாவது: துணிச்சல், மரியாதை மற்றும் ஒருமைப்பாடு கொண்ட மனிதன்’ என்று பதிவு செய்துள்ளார்.

ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, ஆலியா பட், அஜய்தேவ்கான், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்து வருகிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லைக்கா நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் அக்டோபர் 13-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment