ரூ.200 கோடி பட்ஜெட்டில் 'பாகுபலி 3': எஸ்.எஸ்.ராஜமெளலியின் மெகா திட்டம்!
- IndiaGlitz, [Wednesday,March 17 2021]
பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கிய ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உலக அளவிலும் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களும் சேர்த்து மொத்த வசூல் ஆயிரம் கோடியை தாண்டியது என்பது இந்திய திரையுலகிற்கே ஒரு ஆச்சரியமான விஷயமாகும்.
இந்த நிலையில் தற்போது ’ஆர்.ஆர்.ஆர். என்ற திரைப்படத்தை இயக்கி வரும் எஸ்எஸ் ராஜமெளலி அடுத்ததாக ’பாகுபலி 3’ குறித்த ஒரு மெகா திட்டத்தை வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த திரைப்படம் திரையரங்கிற்காக இல்லை என்பதும் ஓடிடிக்காக தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
நெட்பிளிக்ஸ் ஓடிடிக்காக ’பாகுபலி 3’ வெப்தொடர் ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாராக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் 9 எபிசோட்கள் கொண்ட இந்த தொடரை எஸ்எஸ் ராஜமவுலி தயாரித்து இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய 2 திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி உள்ளதால் ’பாகுபலி 3’ படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓடிடியில் பெரும்பாலான ரசிகர்கள் படங்களை பார்க்க தொடங்கி விட்டதால் இந்த படம் ஓடிடியில் வெளிவந்தாலும் முதல் இரண்டு பாகங்களை போல் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.