எஸ்.எஸ்.ராஜமெளலி படத்தில் இத்தனை காப்பி காட்சிகளா? ரசிகர்கள் அதிர்ச்சி..
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவான ’பாகுபலி’ என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் 180 கோடியில் உருவாகி 600 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இந்த படம் வசூலில் சக்கை போடு போட்டது.
இந்த நிலையில் இந்த படத்தில் சில வித்தியாசமான காட்சிகள், இதுவரை திரையில் பார்க்காத காட்சிகளை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்ட நிலையில் ரசிகர்கள் பார்த்த பல காட்சிகள் தற்போது ஈயடிச்சான் காப்பி என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
’பாகுபலி’ திரைப்படத்தில் இடம் பெற்ற பல முக்கிய காட்சிகள் ஏற்கனவே ஒரு சில ஆங்கில படங்களில் வெளியாகியுள்ளது என்றும் அதை பார்த்து காப்பியடித்து தான் ’பாகுபலி’ படத்தின் பல காட்சிகள் பல மாஸ் காட்சிகளாக எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் எஸ்.எஸ்.ராஜமெளலி இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் இந்த காட்சிகள் எல்லாம் தாக்கத்தின் காரணமாக உருவாக்கப்பட்டு இருக்கலாம் என எஸ்.எஸ்.ராஜமெளலிக்கு ஆதரவாகவும் ஒரு சிலர் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
🗣️: ATLEE IS A COPYCAT...
— Siddarth ツ 🧊🔥 (@TheCulpritVJ) January 9, 2024
Who is Favourite Director?
🗣️: Rajamouli 🔥
😂😂😂😂😂pic.twitter.com/Qv2QDcm6OM
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments