சென்னையை அதிர வைத்த 'பாகுபலி 2' வசூல்

  • IndiaGlitz, [Tuesday,May 02 2017]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யாகிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ள 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி பாக்ஸ் ஆபிசில் சுனாமியை ஏற்படுத்திவிட்டது.
குறிப்பாக சென்னையில் இந்த படம் ரிலீஸ் தினமான ஏப்ரல் 28 முதல் ஏப்ரல் 30 வரை 20 திரையரங்க வளாகங்களில் 675 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.2,65,48,750 வசூல் செய்துள்ளது. மேலும் இந்த மூன்று நாட்களில் அனைத்து திரையரங்குகளிலும் 100% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசூல் 'பாகுபலி 2' படத்தின் தமிழ்ப்பதிப்பின் வசூல் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பாகுபலி 2' படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகள் மூன்றும் இணைந்து கடந்த வார இறுதியில் ரூ.3,17,44,770 வசூல் செய்துள்ளது. '
மேலும் நேற்றைய மே 1 தொழிலாளர் தின விடுமுறை நாளிலும் சேர்த்து இந்த படம் மொத்தம் ரூ.4.27 கோடி வசூல் செய்துள்ளது. இதில் தமிழ்ப்பதிப்பு ரூ.3.57 கோடியும், தெலுங்கு பதிப்பு ரூ.0.65 கோடியும், இந்தி பதிப்பு ரூ.0.50 கோடியும் வசூல் செய்துள்ளது.
சென்னையில் இந்த ஆண்டின் இரண்டாவது சிறந்த ஒப்பனிங் வசூல் இதுதான் என்பதும் சென்னையை அதிர வைத்த இந்த படத்தின் வசூல் சிறிதும் குறையாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

கடவுளே வாழ்த்தியது போல உணர்கிறேன். சூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்கு ராஜமெளலி பதில்

இந்திய சினிமாவை உலக அளவில் தலைநிமிர்த்திய ஒரு படம் என்று எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களை கூறினால் அது மிகையில்லை. உண்மையான பிரமாண்டம்...

பிரமாண்ட இயக்குனரை பாராட்டிய பிரமாண்ட இயக்குனர்

இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் தென்னிந்தியாவின் எஸ்.எஸ்.ராஜமெளலி மற்றும் ஷங்கர்  ஆகிய இருவரும் மிகவும் முக்கியமானவர்கள். இவர்களுடைய படங்கள் வெளிவரும்போது அந்த படத்தின் நாயகர்களை விட இவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும்...

சென்னையில் 'பாகுபலி 2' படத்தில் தெலுங்கு-இந்தி ஓப்பனிங் வசூல் எவ்வளவு?

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படத்தின் தமிழ் பதிப்பு சென்னையில் கடந்த வாரம் ரூ.3 கோடி வசூலை நெருங்கியது என்பதை பார்த்தோம்.

'பாகுபலி 2' சுனாமியிலும் அசராத 'பவர் பாண்டி'யின் வசூல்

கடந்த வெள்ளியன்று 'பாகுபலி 2' திரைப்படம் இந்தியா முழுவதும் போட்டியே இல்லாமல் சோலோவாக ரிலீஸ் ஆனது.

சிவகார்த்திகேயனுடன் மோதும் விஷால்

தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் செயலாளர் பணி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பணி ஆகியவற்றுக்கு இடையே விஷால் தற்போது 'துப்பறிவாளன்,' இரும்புத்திரை' மற்றும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்...