'நாட்டு நாட்டு' பாடலுக்கு செம டான்ஸ் ஆடிய எஸ்.எஸ்.ராஜமெளலி: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் வசூல் 10 நாட்களில் ஆயிரம் கோடி ரூபாயை நெருங்கி விட்டது என்றும் டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் இந்த படத்தின் சக்சஸ் பார்ட்டி நேற்று இரவு நடைபெற்றது. இந்த பார்ட்டியில் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இரவு முழுவதும் கோலாகலமாக நடந்த இந்த பார்ட்டியில் எஸ்எஸ் ராஜமவுலி மற்றும் ராம் சரண் தேஜா ஆகிய இருவரும் இந்த படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ’நாட்டு நாட்டு’ என்ற பாடலுக்கு நடனம் ஆடிய நடனத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
’ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் இடம் பெற்ற ’நாட்டு நாட்டு’ என்ற பாடலில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் சூப்பராக நடனமாடி இருப்பார்கள் என்பதும் இந்த பாடல் பல திரையரங்குகளில் ஒன்ஸ்மோர் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Fantastic visual from last night party hosted by Dil Raju. @tarak9999 & @AlwaysRamCharan directed, while @ssrajamouli & @AnilRavipudi performed the iconic #NaatuNaatu step???? pic.twitter.com/U8up85yz7T
— Telugu FilmNagar (@telugufilmnagar) April 5, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments