'பாகுபலி 3' குறித்து எஸ்.எஸ்.ராஜமெளலியின் முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,October 01 2016]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் அக்டோபர் 23ஆம் தேதி வெளிவரும் என்றும், இந்த படம் வரும் 2017, ஏப்ரல் 28ஆம் தேதி வெளிவரும் என்றும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராஜமெளலி, 'பாகுபலி 3' உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். பாகுபலி படத்தின் மூன்றாம் பாகம் உருவாகுமா? இல்லையா? என்பது குறித்து கடந்த சில மாதங்களாக வதந்திகள் வெளியாகி வந்த நிலையில் ராஜமெளலியின் இந்த அறிவிப்பு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் 'பாகுபலி' படம் விரைவில் அனிமேஷனில் 'Baahubali - The Lost Legends' என்ற பெயரில் வெளிவரவுள்ளதாகவும், இந்த படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

நடிகை அதிதியின் குற்றச்சாட்டுக்கு இயக்குனர் செல்வகண்ணன் விளக்கம்

நெடுநல்வாடை என்னும் படத்தை இயக்கி வரும் புதுமுக இயக்குனர் செல்வகண்ணன், இந்த படத்தின் நாயகி அதிதியை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவர் வற்புறுத்தியதாகவும் கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து இருவரும் காவல்துறையில் புகார் கூறியதாகவும் செய்திகள் வெளிவந்தது.

சுந்தர் சியின் 'சங்கமித்ரா' இணைவாரா தீபிகா படுகோன்?

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமான 'சங்கமித்ரா' திரைப்படம் மிக பிரமாண்டமாக ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

தோனி படக்குழுவுக்கு சூர்யா பாராட்டு

கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் தோனி தான் ஒரு சூர்யாவின் ரசிகர் என்று கூறியதோடு சமீபத்தில் சென்னை வந்தபோது, சூர்யாவின் குழந்தைகளிடம் அன்புடன் உரையாடினார் என்பதை பார்த்தோம்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் சிறப்பு கட்டுரை

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற நடிகர், ஒப்பற்ற கலைஞர் என்று போற்றபடும் செவாலியே சிவாஜி கணேசனுக்கு இன்று பிறந்த நாள்.

வெங்கட்பிரபுவின் 'சென்னை 600028 II' படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியீடு தேதி

கடந்த 2007ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் முதல் படமான 'சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகமான 'சென்னை 600028 II' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது